இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் கூகுள்!

Sinoj

வியாழன், 22 பிப்ரவரி 2024 (14:11 IST)
இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் கூகுள்  நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஸ்மார்ட்போன்  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்தும் அதைவிட அட்வான்ஸாக பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி, புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.
 
அந்த வகையில், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள கூகுள்   நிறுவனம் Google Pixel  8 Pro ஸ்மார்ட்போன் கடந்தாண்டு வெளியானது. இதில் கேமரா பேண்டில் உடல் வெப்ப நிலையை அளவிடும்  தெர்மாமீட்டர் இணைக்கப்பட்டிருந்த அம்சம்  வரவேற்பை பெற்றது.ஆனால் இதில் வெப்ப நிலையைப் படிப்பதற்கான செயல்பாட்டை கொடுக்கவில்லை.
 
இந்த நிலையில், ஒரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்வதனால் உடல் வெப்பநிலையை அளவிடுதற்கான திறனை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
எனவே அடுத்தாண்டிற்குள் கூகுள்  நிறுவனம் இந்தியாவில் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்