இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல்: அதிர்ச்சி தகவல்

திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:32 IST)
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தைக் கொண்டு வரவேண்டுமென்றால் 12.5 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும் என்பதால் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தல் அதிகரித்து வருவது தெரிந்ததே 
 
குறிப்பாக கேரளாவில் வந்து இறங்கும் விமானங்கள் பெரும்பாலும் தங்க கடத்தல் நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் அவ்வப்போது தங்க கடத்தல் செய்பவர்கள் பிடிபடும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது திடீரென இலங்கையில் தங்கத்திற்கான வரியை அந்நாட்டு அரசு முற்றிலும் நீக்குகிறது இதனால் இலங்கைக்கு தங்கத்தை இலவசமாக கொண்டு வந்து விட்டு அங்கிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்துதல் அதிகரிக்கும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனால் இலங்கை-இந்திய கடல் எல்லையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என வருமான வரி வருமான வரித்துறையினர் கேட்டுக் கொண்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்ய 12.5 சதவீதம் வரி விதித்தது அதிகமானது என்றும் இந்த வரியை குறைத்தால் தங்க கடத்தலை முற்றிலும் தவிர்க்கலாம் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்