பிறந்த 40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற தந்தை கைது !

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (22:07 IST)
குழந்தை பிறந்து 40 நாட்களே ஆனநிலையில் குழந்தையை கொண்டு ஆற்றில் வீசிய தந்தையை  போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெடுங்காடு என்ற பகுதியில் வசித்து வருபவர் உன்னிகிருஷ்ணன்(25). அங்குள்ள ஒரு பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

பின்னர் முகநூல் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு காதலாகித் திருமணத்தில் முடிந்தது. இந்நிலையில், அவரது மனைவிக்கு 40 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்குழந்தைக்கு நூல் கட்டும் நிகழ்ச்சி நடந்த நிலையில்,  தனது குழந்தை எடுத்துச் சென்ற உன்ன்கிருஷணன் மீண்டும் குழந்தையை அழைத்து வரவில்லை.

இதுகுறித்து குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதையத்துட் போலீசார் உன்னிகிருஷ்ணனின் விசாரித்தனர். அவர் குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும் தன் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் அதனால் குழந்தையைக் கொன்று ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்