“அமித்ஷா பேசறேன்.. எம்.பி சீட் வேணுமா?” முன்னாள் எம்.எல்.ஏவுக்கு விபூதி அடிக்க பார்த்த போலி அமித்ஷா!

Prasanth Karthick

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (13:44 IST)
உத்தர பிரதேசத்தில் மர்ம கும்பல் மத்திய அமைச்சர் அமித்ஷா போல பேசி முன்னாள் எம்.எல்.ஏவிடம் பண மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உத்தர பிரதேசத்தில் கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தவர் பாஜகவை சேர்ந்த கிஷன்லால். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமீபத்தில் கிஷன்லாலுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கிஷன்லாலுக்கு எம்.பி சீட் தர தயாராக உள்ளதாகவும், அதற்கு அவர் சில லட்சங்கள் தர வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

ஆனால் கிஷன்லாலுக்கு இந்த போன் காலில் சந்தேகம் வரவே பதில் சொல்லவில்லை. ஆனால் அதன்பின்னரும் அடிக்கடி அந்த போலி அமித்ஷா போன் செய்து கிஷன்லாலை தொல்லை செய்து வந்துள்ளார். அதனால் கிஷன்லால் போலீஸில் புகார் அளித்தார். அந்த மொபைல் எண்ணை ட்ராக் செய்த போலீஸார் ரவீந்திர மவுரியா என்ற நபரை கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசம் பரேலி பகுதியில் உள்ள சமூஹா கிராமத்தை சேர்ந்த ரவீந்திர மவுரியா அந்த சிம் கார்டை அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு நபரிடம் இருந்து மிரட்டி வாங்கியுள்ளார். அதிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏவுக்கு போலி அமித்ஷாவாக போன் செய்து பேசி மோசடி செய்ய முயன்றுள்ளார். அவரை கைது செய்துள்ள போலீஸார் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்