ஒன்னும் தெரியாம பேசாதீங்க... மலேசிய பிரதமருக்கு இந்தியா பதிலடி!

சனி, 21 டிசம்பர் 2019 (18:20 IST)
மலேசிய பிரதமர் மகாதீர் முகமது உண்மையில் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது.
 
இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் இந்திய அரசின் குடியுரிமை சட்டம் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளன.
 
இந்தியர்கள் பலர் பல்வேறு பணிகளுக்காக இஸ்லாமிய தேசங்களான மலேசியா, அரபு நாடுகளுக்கு பணி விசாவில் செல்கின்றனர். இந்நிலையில் இந்திய குடியுரிமை சட்டம் குறித்து பேசியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது. 
 
அவர் கூறியதாவது, மதசார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா முஸ்லீம் மக்களின் குடியுரிமையை பறிக்க செய்யும் நடவடிக்கைகள் வருத்தமளிக்கின்றன. இதே போல் நாங்களும் சட்டம் போட்டால் இங்கும் கூட குழப்பமும், நிலையற்ற தன்மையும் உண்டாகும். அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலேசிய பிரதமர் மகாதீர் முகமது உண்மையில் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உட்பட்ட விஷயத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
 
புதிய திருத்த சட்டம் 3 நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாகவும் அது எந்த இந்திய குடிமகனையும் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்