சிலிண்டருக்கு மானியம் திட்டம் நீட்டிப்பு

Sinoj

வியாழன், 7 மார்ச் 2024 (21:14 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  கடந்த 2 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் 3 வது முறை ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு பணியாற்றி வருகிறது.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிபங்கீடு,  வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
இன்னும் சில நாட்களில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.
 
இந்த நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியிலும் பிரசாரத்தில் பாஜக தலைவர்கள் பிஸியாகியுள்ள நிலையில் இன்று,'சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டம் ஓரண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக 'மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அதில், ''சமையல் எரிவாயு மானியத்தை அடுத்த ஓராண்டிற்கு நீட்டிக்க மத்திய  அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா போஜனா பயனாளிகளுக்கான எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்படுவதாகவும், இதற்காக ரூ.12 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக'' மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்