Budget 2021 - என்னென்ன எதிர்பார்க்கலாம்?

வெள்ளி, 22 ஜனவரி 2021 (15:57 IST)
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த பட்ஜெட்டில் என்ன எதிர்ப்பார்க்கலாம் என பார்ப்போம்... 
 
கொரோனா காரணமாக நாடு கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்து கட்சி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும். அதற்கு முன்பாக ஜனவரி 29ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்க உள்ளது.
 
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில் அதை தொடர்ந்து முதல் கட்ட கூட்டம் பிப்ரவரி 15 வரையிலும், இரண்டாம் கட்ட கூட்டம் மார்ச் 1 வரையிலும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ள எம்.பிக்கள் அனைவரும் 27,28 தேதிகளில் பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
பொருளாதார மீட்சிக்கு நம்பகமான பாதை வரைபடத்தை வழங்குவதே பட்ஜெட் 2021 இன் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. 
 
மத்திய பட்ஜெட் 2021 ஒரு நிதி ஊக்கத்தை வழங்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்களும், நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர். 
 
ஆத்மநிர்பார் பாரத் மற்றும் ஒரு தற்சார்பு பொருளாதாரத்தின் தேவை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த வருடத்திற்கான பட்ஜெட் இருக்கும். 
 
உள்நாட்டு உற்பத்தி, விவசாயத் துறை ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்