தமிழில் அறிக்கை, கால அவகாசம் நீட்டிக்க முடியாது! – மேல்முறையீடு செய்யும் சுற்றுசூழல் அமைச்சகம்!

புதன், 29 ஜூலை 2020 (10:48 IST)
சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு மீது மக்கள் கருத்து சொல்லும் அவகாச நீட்டிப்பிற்கு எதிராக சுற்றுசூழல் துறை அமைச்சகம் மேல்முறையீடு செய்துள்ளது.

மத்திய அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரைவினால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பாஜகவினர் ஏற்கனவே உள்ள சட்டத்தில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும் எனவும், மக்கள் கருத்தை கேட்பதற்கான அவகாசம் ஆகஸ்டு 15 வரை நீட்டிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வரைவை பிராந்திய மொழிகளில் வெளியிடுதல் மற்றும் கால அவகாசம் நீட்டிப்பிற்க்ய் எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பிராந்திய மொழிகளில் வரைவை வெளியிட்டால்தானே மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க இயலும், சட்டத்திலேயே வரைவு ஒன்றை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும்போது பிராந்திய மொழிகளில் வெளியிட வேண்டும் என இருக்கும்போது அரசு அதை மறுப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்