தேர்தல் முறைகேடுகள்: C vigil செயலி மூலம் புகார் அளிக்கலாம்- தலைமை தேர்தல் ஆணையர்

Sinoj

சனி, 16 மார்ச் 2024 (17:26 IST)
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல்  நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதிகளை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். 
 
இந்தியாவில் மக்களவை தேர்தல்  7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தமிழ் நாடு,டெல்லி, குஜராத், புதுச்சேரி, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில்      ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
கர்நடகம், ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூரில்  2 நாட்கள் வாக்குப்பதிவு, நடைபெறுகிறது.
சத்திஸ்கர் , அஸ்ஸாமில் 3 நாட்கள் வாக்குப்பதிவு நடக்கிறது.
 
ஒடிஷா, மத்திரபிரதேசம் மாநிலங்களில் 4 நாட்கள் வாக்குப்பதிவு நடக்கிறது. 

மகாராஸ்டிரம், ஜம்மு -காஷ்மீரில் 5 நாட்கள் வாக்குப்பதிவு நடக்கிறது.
 
உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 7  நாட்கள் வாக்குப்பதிவு நடக்கிறது.
 
இந்த நிலையில், தேர்தல்  விதிமுறைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:
 
*தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக C vigil செயலி மூலம் புகார் அளிக்கலாம். 
 
*பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவரை கட்டுப்படுத்தப்படும்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்.
 
*போலியான தகவல்கள், செய்திகள் பரப்பினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களை பொறுப்புடன் கையாள வேண்டும்.

*தனி நபர் வாழ்க்கை குறித்த பேச்சுகாளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகளை தேர்தல் பணி, பரப்புரைகளில் பயன்படுத்தக்கூடாது.

*தேர்தல் சமயங்களில் போலி செய்திகளை தடுக்க தனி இணையபக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, MYTH VS REALITY என்ற இணையபக்கம்  தேர்தல் ஆணையத்தில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  நாடு முழுவதும் வருகின்ற மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்