உபரி நீரை கூட தர மறுக்கும் எடியூரப்பா!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:27 IST)
காவிரி உபரி நீரை யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என எடியூரப்பா பேச்சு. 

 
மழைக்காலங்களில் காவிரி ஆற்றிலிருந்து சென்று கடலில் வீணாக கலக்கும் நீரை தென் மாவட்டங்களுக்கு திருப்பும் வகையில், சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
 
ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா. இது குறித்து அவர் கூறியதாவது, கர்நாடக மக்களின் நலன்கள் காக்கப்படும். உபரி நீரை தமிழ்நாடு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்