மீண்டும் அதிர்ந்த அருணாச்சலப் பிரதேசம்: பொதுமக்கள் பீதி

சனி, 20 ஜூலை 2019 (10:28 IST)
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலையும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நேற்று மதியம் அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலையும் 4.24 மணிக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமங் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை என்பதால் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் அச்சத்தில் சாலைகளுக்கு ஓடி வந்து தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இது அம்மாநிலத்தில் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்