விரலை கடித்து துப்பிய காப்பீட்டு நிறுவன ஊழியர்! – டெல்லியில் பரபரப்பு

புதன், 16 செப்டம்பர் 2020 (08:39 IST)
டெல்லியில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் இருவரிடையே நடந்த தகராறில் விரலை கடித்து துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மயூர் விஹாரியில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் மோஹித். இவர் ஒரு பணி நிமித்தமாக தனது சக ஊழியர் சித்தார் என்பவரோடு வெளியூருக்கு காரில் சென்றுள்ளார்.

பணி முடிந்து திரும்பி வரும்போது மோஹித் – சித்தார்த் இடையே பணி தொடர்பாக வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் காருக்குள்ளேயே இருவரும் சண்டையிட தொடங்க, ஆத்திரமடைந்த சித்தார்த் சக ஊழியரான மோஹித்தின் விரலை கடித்து துண்டாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மோஹித் அலறியடித்துக் கொண்டு காரை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இதுகுறித்து மோஹித் அளித்த புகாரின் பேரில் சித்தார்த் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு காரில் கிடந்த அவரது விரலை மீண்டும் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்