கொரோனா மருத்துவர்களுக்கு …ரெயின்கோட், ஹெல்மெட் தற்காப்பு உபகரணங்கள் பற்றாக்குறை !

செவ்வாய், 31 மார்ச் 2020 (21:56 IST)
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் , உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 748066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35388 பேர் பலியாகியுள்ளனர் .இந்தியாவில் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.  எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,397ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி நிசாமுதின் பகுதியில் மதம் சார்ந்த  மாநாடு நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 980 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று புதிதாக தமிழகத்தில் கொரொனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 57 பேர்களில் 50 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய மருத்துவர்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராட தகுந்த தற்காப்பு உபகரணங்கள் இல்லாமல்  ரெயின்கோர்ட், ஹெல்மெட் போன்றவற்றை கொண்டு கொரோனாவால் பாதிப்பட்ட நோயாளிகலுக்கு சிகிச்சை அளித்துவருவதாகக் கள ஆய்வில்  தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், N95 முகக்கவசம் இல்லாமல் தலைக்கவசம் மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை பயன்படுத்திவருவதாகவும் மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்