இந்தியாவில் 52 லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை

வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:06 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
எனவே, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 51,18,254 லிருந்து 52,14,677 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40.25 லட்சத்திலிருந்து 41.12 லட்சமாக உயர்ந்துள்ளது. அதோடு உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198 லிருந்து 84,372 ஆக அதிகரிப்பு. 
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10.17 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க்ப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 87,472 பேர் குணமடைந்துள்ளனர், 1,174 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்