விவசாயிகளை தெருவுக்கு கொண்டு வந்துட்டாங்க! – ப.சிதம்பரம், ராகுல் கண்டனம்!

ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (13:01 IST)
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாவால் விவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக மசோதா, விலை உறுதிபாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டதிருத்த மசோதாக்கள் எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களைவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவை எதிர்த்து அகாலிதள அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று இந்த மசோதாக்கள் மாநிலங்களவை ஒப்புதலுக்கு வந்தது. இதை எதிர்த்து எதிர்கட்சியினர் பேசிய போதும் வெற்றிகரமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் “விவசாயிகளுக்கு தேவை ஆயிரக்கணக்கான விற்பனை சந்தைகள். அதை ஏற்படுத்தி தராமல் பாஜக அரசு இதுபோன்ற மசோதாக்களை நிறைவேற்றுவது கார்ப்பரேட்டுகளுக்குதான் வாய்ப்பாக அமையும். ஏற்கனவே பாஜக அரசால் உத்திர பிரதேச, ஹரியானா விவசாயிகள் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல்காந்தி மத்திய அரசின் வேளாண் திட்டம் வெற்றிபெற நாடு அனுமதிக்காது என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்