ஊரடங்கு வாபஸ்... மத்திய அரசை மீறி முதல்வர் அறிவிப்பு?

திங்கள், 6 ஏப்ரல் 2020 (17:23 IST)
14 ஆம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். 

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.   
 
இந்நிலையில், கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு 14 ஆம் தேதிக்கு பிறகு படிப்படியாக வாபஸ் பெற மக்கள் இதை செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது...
 
கொரோனாவை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற 14 ஆம் தேதி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் 14 ஆம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற முடியும்.
 
அதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார். 
 
ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது வாபஸ் பெறப்படுமா என மத்திய அரசு இன்னும் முடிவு செய்யாத நிலையில் எடியூரப்பா இவ்வாறு பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்