தமிழகத்தில் போட்ட நாடகம் ஆந்திராவில் ஓடாது: மோடிக்கு சந்திரபாபு நாயுடு கூறுவது என்ன?

வியாழன், 15 மார்ச் 2018 (16:35 IST)
தெலங்கானா மாநிலம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவின் இணக்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சர்வையில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த  2 அமைச்சர்கள் பதவி விலகினர். 
 
இது ஒருபுறம் இருக்க, அண்மையில் ஜனசேனா கட்சியின் ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் அக்கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கின்னார்.
 
இதற்கு பதில் அளித்துள்ள சந்திரபாபு நாயுடு, மத்தியில் ஆளும் பாஜக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜகன் மோகன் ரெட்டியை வைத்து தமிழத்தில் நடத்திய நாடகத்தை இங்கும் அரங்கேற்ற பார்க்கிறது என கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ வைத்து பாஜக ஆட்சி நடத்துவது போல ஆந்திராவில் நடத்த முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்