ஆய்வு குழுவுக்கு எதிராக வலுத்த கண்டனங்கள்! – குழுவை மாற்றியமைக்க முடிவு!

ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (13:46 IST)
இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவை மாற்றியமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இல்லாதது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்து வந்தன. தொடர்ந்து மற்ற மாநிலங்களும் மொழிரீதியான பிரதிநிதித்துவம் குழுவில் இல்லை என்று புகார் தெரிவித்தன.

இதுகுறித்து 32 எம்பிக்கள் குடியரசு தலைவருக்கு கடிதமும் எழுதினர். இந்நிலையில் மத்திய அரசு அமைத்துள்ள இந்திய பண்பாட்டு கலாச்சார ஆய்வு குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில அரசுகளின் பரிந்துரைகளை ஏற்று குழுவை மாற்றியமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்