கொரோனா காலத்திலும் ஊழலா? குவிந்த புகார்கள்! – அதிர்ச்சியில் மத்திய அரசு!

திங்கள், 7 டிசம்பர் 2020 (18:25 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் கொரொனா காலத்தில் அளிக்கப்பட்ட ஊழல் புகார்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாக கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலையில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும் பலர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் கொரோனா நடவடிக்கைகளில் உள்ள தங்களது புகார்களை அளிக்க மத்திய அரசு தளம் ஒன்றையும் உருவாக்கியது.

இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் அதில் குவிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமாக பரிசோதனை இழுபறி, துன்புறுத்தல், போதிய வசதிகள் ஏற்படுத்தாதது என 1,67,000 புகார் குவிந்துள்ளன. அதில் சுமார் 40,000 புகார்கள் ஊழல், மோசடி தொடர்பானவை என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்