தற்கொலை நாடகமாடிய பெண்...உயிருடன் மீட்பு ! காட்டிக் கொடுத்த செல்போன் - பகீர் தகவல்

புதன், 10 ஜூலை 2019 (14:39 IST)
தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு பிரபல காப்பீடு நிறுவனம் ஒன்றில்  மேலாளராக பணியாற்றி வந்தவர் கோமல். சமீபத்தில் இவரைக் காணவிலை என்று இவரது தந்தை காசியாபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஜூலை 6 ஆம்தேதி  உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள ஹிந்தன் ஆற்றங்கரை பாலத்தில் கோமல் கரை நிறுத்தியிருந்ததை கண்டுபிடித்து, அதை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கடிதம் இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
 
அதில், தான் ஹிந்தான் ஆற்றில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக கோமல் எழுந்தியிருந்ததால், அந்த ஆற்றில் இறங்கி கோமலில் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
பின்னர் வெகுநாட்கள் ஆகியும் கோமலின் உடல் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோமலின் செல்போனிலிருந்து அழைப்புகள் செல்வது உளவுத்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து, அந்த நம்பரை டிராக் செய்தனர். அந்த எண்  பெங்களுரில் இருந்து இயங்குவதை தெரிந்துகொண்டு , கோமலை மீட்டு விசாரித்தனர். 
 
அதில், தனது மாமியார் கொடுமையால் தற்கொலை செய்ததாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர். தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட பெண் , உயிருடன் வந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்