இந்த மண்ணின் சட்டம் தான் குடியுரிமை திருத்தச் சட்டம், யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா

புதன், 27 டிசம்பர் 2023 (11:34 IST)
குடியுரிமை சட்டம் என்பது  இந்த மண்ணின் சட்டம் என்றும் அந்த சட்டத்தை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு இரண்டாவது முறையாக அமைக்கப்பட்டதும் குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த மசோதா கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது என்பதும் அப்போதே குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்தாலும் இன்னும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்தாத முறை நிலை இருப்பதாகவும் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில்  குடியுரிமைச் சட்டத்தை நிச்சயமாக அமல்படுத்துவோம் என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் மார்ச் மாதத்திற்குள் குடியுரிமைச் சட்டம் இறுதி வரைவு நடைமுறைக்கு வரும் என்றும்  தெரிவித்தார். 
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்