லஞ்சப் புகார்…..பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் !

திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:54 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் லஞ்சப் புகாருக்கு ஆளாகி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது  பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில்,தேஷ்ம் உக்.  இவர் காவல்துறையினரின் உதவியின் பேரில் மிரட்டிப் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,  அவர் மீது விசாரணை நடத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 எனவே இன்று மும்பையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.  இதனால் அம்மாநில அர்சியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்