உசேன் போல்ட் சாதனையை முறியடித்தவருக்கு... ஒலிம்பிக் போட்டியில் வாய்ப்பு ?

சனி, 15 பிப்ரவரி 2020 (19:40 IST)
உசேல் போல்ட் சாதனையை முறியடித்தவருக்கு ... ஒலிம்பிக்கில் வாய்ப்பு ?

உலக தடகள வரலாற்றில் எப்போதும் நினைவு கூறப்படும் ஒரு பெர்யர் உசேல் போல்ட். எந்த் வசதியும் இல்லாமல் தனது உழைப்பு திறமையாலும் இந்த உலகில் புகழின் உச்சிக்கு  சென்றுள்ளார்.
 
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த இவர் ஒலிம்பிக் பதக்கங்களை 11முறை வென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன் ஷிப் போட்டியில்ல்
9.58 வினாடிகள் கடந்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையைஇந்தியாவைச் சேர்ந்த ஒருவர் முறியடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில்
 
கர்நாடகாவில் நடைபெறும் பாரம்பரிய திருவிழா ஓட்டம் கம்பாலா. இதில் பந்தய தூரமாக 142.5 மீட்டரை வெறும் 13 புள்ளி 62 வினாடிகளில் கடந்துதான் இந்திய அளவில் பரவலக பேசப்பட்டு வருகிறது. உசேன் போல்டின் சாதனையை முறியடித்தவராகக் கருதப்படுபவர் ஸ்ரீனிவாசா கவுடா என்பவர் ஆவார். தற்போது காளைகளுடம் மல்லுக்கட்டி மின்னல் வேகத்தில் ஓடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 
இந்நிலையில், சீனிவாச கவுடாவுக்கு பயிற்சி கொடுத்தால் ஒலிம்பிக்கில் வெல்ல வாய்ப்புள்ளது என பலரும் கூறிவரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  அவருடைய ( சீனிவாச கவுடா ) ரயில் டிக்கெட் சேர்ந்துவிட்டது. வரும் திங்கட்கிழமை அன்று அவர் எஸ்.ஏ.சி வருவார். தேசிய பயிற்சியாளர்கள்  அவருக்கு சிறப்பான பயிற்சி அளிப்பார்கள் பிரதமர் நரேந்திரமோடியின் குழுவாகிய நாங்கள் விளையாட்டில் திறமையானவர்களை கண்டுபிடித்து வாய்ப்புகள் தருவோமென தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்