12 தொகுதிகளில் முதல்வர் பதவியை கோட்டைவிட்ட லாலு பிரசாத் மகன்!

புதன், 11 நவம்பர் 2020 (07:28 IST)
12 தொகுதிகளில் முதல்வர் பதவியை கோட்டைவிட்ட லாலு பிரசாத் மகன்!
பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தன 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை முழுமையான முடிவுகள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து பாஜக  மற்றும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள கூட்டணியில் 110 தொகுதிகளை பெற்றுள்ளது 
 
பீகாரில் ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளில்  ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது என்பதும் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி, நூலிழையில் முதல்வர் பதவியை பிடிப்பதில் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் பீகார் மாநிலத்தில்  பாஜக தனிப்பெரும் கட்சியாக 74 தொகுதிகளில் வெற்றி பெற்று அனைவரையும் அசத்தி உள்ளது. அந்த கட்சியின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதள கட்சி 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் நிதிஷ்குமார் தான் முதல்வர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தனிப்பெரும் கட்சியாக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்