நீங்கதான் சூனியம் வெச்சு கொன்னு இருப்பீங்க! – பழங்குடி பெண்களை அடித்து கொன்ற கிராமத்தினர்!

சனி, 3 அக்டோபர் 2020 (12:23 IST)
அசாமில் பெண் ஒருவரை பில்லி சூனியம் வைத்து கொன்றதாக பழங்குடி பெண்கள் இருவரை கிராமத்தினர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் பில்லி சூனியம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதால் 2015ம் ஆண்டில் பில்லி சூனிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும் அடிக்கடி பில்லி சூனியம் செய்ததாக கொலைகள் நிகழ்த்தப்படுவது தடுக்க முடியாததாக இருக்கிறது.

அசாம் மாநிலம் ஆங்லாங் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் ஊர் தலைவர் மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்ஹு மருத்துவம் பார்த்தும் அவர் குணமாகாமல் இறந்தார். ஊர் தலைவர் மகள் இறந்ததற்கு பழங்குடி இன பெண்கள் இருவர் பில்லி சூனியம் வைத்ததே காரணம் என ஊர் மக்களிடையே வதந்தி பரவியது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் பழங்குடி பெண் ஒருவரையும், அவரது மகளையும் அடித்துக் கொன்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்