அமிதாப் வரலாற்றுல நடந்ததைதானே கேட்டார்? – வலுக்கும் கண்டனங்களும் ஆதரவும்!

புதன், 4 நவம்பர் 2020 (12:25 IST)
கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் மனுஸ்மிருதி குறித்து கேட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இந்தியில் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு வரும் அமிதாப் பச்சன் சமீபத்தில் அதில் கேட்ட கேள்வி இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் “1927ம் ஆண்டு அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் எந்த புத்தகத்தை எரித்தனர்?” என்று கேள்வி கேட்கப்பட்டு கீழே மனுஸ்மிருதி உள்ளிட்ட நான்கு ஆப்சன்களும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த கேள்வி இந்து மதத்தை புண்படுத்தும் வகியில் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சி, அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதம் எழுந்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து பதிவிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “வரலாற்றில் நடந்த சம்பவத்தை பற்றி கேள்வி எழுப்பியது எந்த விதத்தில் மதத்தை புண்படுத்துவதாகும்” என கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம் கேட்பதற்கு அறிவார்ந்த கேள்விகள் எவ்வளவோ இருக்க குறிப்பிட்டு இவ்வாறான கேள்விகளை அமைப்பது சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமாகும் நோக்கில்தான் என குற்றச்சாட்டுகளையும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்