ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பு

புதன், 19 செப்டம்பர் 2018 (16:33 IST)
ஆப்கானிஸ்தான் அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு  தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த முக்கியமான சந்திப்பின் போது, இருநாடுகளின் பரஸ்பர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு, தலீபான்களுடனான அமைதி உடன்படிக்கை விவகாரங்கள் மற்றும் இந்தியா உதவியுடன் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு போன்றவை தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்