இன்று ஒரே நாளில் ரூ.90,000 கோடி வரை இழப்பு!! என்ன ஆச்சு அதானி நிறுவனங்களுக்கு?

Mahendran

புதன், 13 மார்ச் 2024 (17:23 IST)
இந்திய பங்குச்சந்தை இன்று மோசமான சரிவை சந்தித்ததை அடுத்து அதானி குழும நிறுவனங்களுக்கு மட்டும் 90 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தை நேற்று சரிவுடன் முடிவடைந்த நிலையில் இன்றும் பெரும்பாலான பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக அதானி குழுமத்தில் உள்ள அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் இதன் பங்குகள் 13 சதவீதம் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
 
அதேபோல் அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர், ஏசிசி மற்றும் அம்புஜம் சிமெண்ட் ஆகியவற்றின் பங்குகளும் மிக மோசமாக சரிந்து உள்ளது. இந்த சரிவின் காரணமாக அதானி குழுமத்தின் மொத்த மூலதன மதிப்பு 90 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
அதானி குழும நிறுவனங்கள் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களும் இன்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்