நடிகர் ஷாருக்கானிடம் ரூ. 25 கோடி வாங்கியதாக என்.பி.சி மண்டல இயக்குனர் மீது புதிய வழக்குப் பதிவு!

Sinoj

சனி, 10 பிப்ரவரி 2024 (18:31 IST)
மும்பையின் முன்னாள் என்.பி.சி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது அமலாகத்துறை புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் இருந்து காப்பாற்ற ஷாருக்கானின் குடும்பத்தினரிடம் லஞ்சம் கேட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கின்படி, புதிய வழக்குப் பதியப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதாவது, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் சுற்றுலாவுக்கு புறப்பட்டது.

இதில், என்சிபி அதிகாரிகளும் பயணம் செய்தனர். இந்த கப்பலின் கேளிக்கை விருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது   செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை காப்பாற்ற ரூ. 25 கோடி வாங்கியதாக கடந்த மே மாதம் சமீர் வாங்கடே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த  வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது ED வழக்குப் பதிவு செய்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்