செல்போனை இழந்ததால் செத்துப்போன இளைஞர்

சனி, 22 டிசம்பர் 2018 (10:16 IST)
சூரத்தில் செல்போனை இழந்த வேதனையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். அதனை மிகவும் பத்திரமாக பார்த்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் சவாரி சென்ற இடத்தில் தாம் கஷ்டப்பட்டு வாங்கிய போனை இழந்துவிட்டார். இந்த விஷயத்தை எப்படி தனது பெற்றோரிடம் கூறுவது என குழப்பத்தில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் துக்கம் தாளாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்றைய இளம்தலைமுறையினருக்கு தகிப்புத்தன்மை என்பது துளிஅளவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்