யாராவது வெளிய வந்தா முட்டிப்புடுவேன்! – காவலர்களோடு ரோந்து வரும் ஆடு! #WebViral

சனி, 25 ஏப்ரல் 2020 (11:14 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட ரோந்து குழுவில் ஆடு ஒன்று வலம் வருவது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஊரடங்கின்போது மக்கள் தேவையின்றி வெளியே திரிவதை தவிர்க்க மும்பை போலீஸ் ரோந்து குழுவை அமைத்துள்ளனர்.

அந்த ரோந்து குழுவிற்குள் புகுந்து கொண்ட ஆடு ஒன்று குழுவுக்கு நடுவே ஹாயாக ரோந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Oh goat! Watch who’s marching ahead with the #police in a route march! #lockdown #stayhome #Covid_19

VC- #MumbaiPolice pic.twitter.com/tz9GkNBG8d

— Sunchika Pandey/संचिका पाण्डेय (@PoliceWaliPblic) April 24, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்