உப்புமாவில் உப்பு அதிகம் இருக்கலாம் ஆனால் உப்புமாவே அதிகமாக இருந்தால்?: மாடிக்கொண்ட தம்பதிகள்!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (18:20 IST)
புனே விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த தம்பதிகள் இருவர் தாங்கள் வைத்திருந்த உணவில் அதிக அளவிலான வெளிநாட்டு கரன்சிகள் கடத்தியபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.


 
 
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்லும் போது கொண்டு செல்லும் பொருட்களுக்கும் அதன் அளவுகளுக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. அதே போன்ற கட்டுப்பாடுகள் தாங்கள் கொண்டு செல்லும் பணத்திற்கும் உள்ளது. அதனை மீறும் போது அது சட்ட விரோதமாகிவிடுகிறது.
 
இந்நிலையில் புனே விமான நிலையத்தில் இருந்து தம்பதிகள் இருவர் துபாய் செல்ல இருந்தனர். அவர்கள் அதிக அளவிலான உப்புமா வைத்திருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த பொருட்களை மீண்டும் சோதனை நடத்தினர்.
 
அதில் அவர்கள் வைத்திருந்த உப்புமாவில் கடத்தி செல்ல இருந்த 86000 அமெரிக்க டாலர் மற்றும் 15000 யூரோவை கைப்பற்றினர் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இந்திய பணமும், வெளிநாட்டு பணமும் கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்