முதல்வரின் முடிவால் 95 லட்சம் புடவைகள் முடக்கம்

சனி, 29 செப்டம்பர் 2018 (22:55 IST)
தெலுங்கானாவில் ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகையின்போது ஏழை பெண்களுக்கு இலவச புடவை வழங்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டும் ஏழை பெண்களுக்கு வழங்குவதற்காக சுமார் 280 கோடி மதிப்பில் 95 லட்சம் புடவைகள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ் திடீரென தனது அமைச்சரவையை ராஜினாமா செய்தார். இருப்பினும் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் புடவை வழங்கும் திட்டத்திற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கருதப்பட்டது.

ஆனால் ஒரு ஆட்சி ராஜினாமா செய்துவிட்டாலே, உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என தேர்தல் கமிஷன் கூறிவிட்டதால் தற்போது கொள்முதல் செய்த புடவைகளை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முதல்வர் சந்திரசேகர ராவ் திகைத்து போய் உள்ளார்.  இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் எனவே, நடத்தை விதிகள் இதற்கு பொருந்தாது என தேர்தல் கமிஷனிடம் முறையிடவும் அவரது கட்சியினர் தேர்தல் கமிஷனிடம் முறையிட திட்டமிட்டுள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்