கொரோனா காலத்தில் மட்டும் இவ்வளவு பி எஃப் பணம் எடுக்கப்பட்டுள்ளதா? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:38 IST)
கொரோனா லாக்டவுன் காலத்தில் மட்டும் 39000 கோடி ரூபாய் மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா லாக்டவுனால் பலரும் தங்கள் வேலைகளை இழந்த நிலையில் தங்கள் பி எஃப் பணத்தில் 75 சதவீதத்தை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் நிறுவனங்களுக்கும் மிக விரைவாக பணத்தை அளிக்கவேண்டும் என உத்தரவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் பலரும் தங்கள் பி எஃப் பணத்தை எடுத்து வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது. அதன் படி 39000 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அதிக பணம் எடுத்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்ட்ரா முதல் இடத்திலும் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்