நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கு புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு சுற்றறிக்கை..!

Mahendran

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (10:57 IST)
நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கையின் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி வட மாநிலங்களில் இந்த புதிய கல்விக் கொள்கையை முறைக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு கேரளா உள்பட ஒரு சில மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கையை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்றும் கூறி வருகின்றன. 
 
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் சற்றுமுன் அனுப்பிய சுற்றறிக்கையில் நடப்பு கல்வி ஆண்டில் 3 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது 
 
தமிழ்நாட்டில் ஏற்கனவே புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்