கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் காவல்..! ஏப். 23 வரை நீட்டித்து உத்தரவு..!!

Senthil Velan

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (14:00 IST)
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ஆம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது.
 
கைது செய்யப்பட்ட கவிதவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், டெல்லி திகார் சிறையில் கவிதா அடைக்கப்பட்டுள்ளார்.
 
இதனிடையே  தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,  அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ALSO READ: போதை பொருள் கடத்தல் வழக்கு..! கைதாகிறாரா இயக்குனர் அமீர்..?
 
இந்நிலையில் கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்