ஒரே நாளில் 1300 புள்ளிகள் சரிந்த பங்குச்சந்தை: என்ன காரணம்?

வியாழன், 15 அக்டோபர் 2020 (18:03 IST)
கடந்த சில நாட்களாக தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் திடீரென இன்று 1300 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செட் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இன்று காலை வர்த்தகம் 41,048 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நேரம் ஆக ஆக சென்செக்ஸ் புள்ளிகள் கடுமையாக சரிந்தது. இன்று வர்த்தக முடிவின்போது 1320 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர் 
 
சீன அமெரிக்க நாடுகளுக்கும் இடையே வணிக உறவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டிருக்கும் என்றும், அது மட்டுமின்றி உலக நாடுகளில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவியுள்ளதாலும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது 
 
மேலும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு உள்ளதாகவும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளி வந்ததும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது 
 
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் திடீரென 1320 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குசந்தை மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குசந்தைகள் அனைத்துமே இறக்கத்தில் தான் என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்