ஒரே ஒரு சீன்ல நடிச்சிட்டு இந்த அக்கப்போறா? ‘மாஸ்டர்’ நடிகருக்கு நெட்டிசன்கள் கண்டனம்

ஞாயிறு, 31 ஜனவரி 2021 (08:08 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகர் போடும் சீன் குறித்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் 
 
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் 
 
இந்தநிலையில் அந்த படத்தில் விஜய் உடன் இருந்த பூனை தற்போது தன்னுடைய வீட்டில் வளர்வதாக அவர் தெரிவித்த புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் ‘மாஸ்டர்’ படத்தில் பாதி படம் வந்த அர்ஜூன் தாஸ் கூட தான் கம்முனு இருக்காரு, ஆனால் ஒரே ஒரு சீன்ல வந்து இவர் பண்ற அக்கப்போரு தாங்க முடியலை என்று கமென்ட் செய்துள்ளனர் 
 
இருப்பினும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஜேடி வளர்த்த பூனையை தற்போது இவர் தன்னுடைய வீட்டில் தன்னுடைய மகளுக்காக வளர்த்து வருவதற்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Yes! Your Assumption is right

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்