வாரத்தின் முதல் நாளே ஷாக்கிங்.. 700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த சென்செக்ஸ்..!

Siva

திங்கள், 15 ஏப்ரல் 2024 (09:46 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேல் திடீரென சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் பதட்டம் காரணமாக உலக அளவில் அனைத்து நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிந்து வருகிறது என்றும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எடுத்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
 
 இதனால்தான் இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று திடீரென 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 790 புள்ளிகள் சார்ந்து 73 ஆயிரத்து 450 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 240 புள்ளிகள் சார்ந்து 22284  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தைப் போர் காரணமாக சரிந்தாலும் மீண்டும் பங்குச்சந்தை மீண்டுவிடும் என்றும் குறிப்பாக தேர்தலில் தேர்தலுக்குப் பிறகு பங்குச்சந்தை உச்சத்துக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்