கமலுக்கு மனநல ஆலோசனை அவசியம்..! அண்ணாமலை காட்டம்..!!

Senthil Velan

திங்கள், 8 ஏப்ரல் 2024 (12:38 IST)
கமலுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை கண்டிப்பாக தேவை என்று கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.
 
கோவை மாவட்டம் சரவணப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதை சுட்டி காட்டினார்.
 
மேலும் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்  வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும்,  பண பட்டுவாடா பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
நாட்டின் தலைநகராக நாக்பூரை எப்படி மாற்ற முடியும் என கமலஹாசன் கூறியதற்கு பதில் அளித்து அண்ணாமலை, கமலுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை கண்டிப்பாக தேவை என்று விமர்சித்தார்.
 
சென்னையில் நாளை மாலை நடைபெறும் "ரோடு ஷோ" நிகழ்ச்சியிலும், கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். 

தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக அண்ணாமலை கூறினார். 4 ஆயிரம் கோடிக்கு மைதானம் அமைப்பதற்கு பதில்,  தமிழகத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை  முதலமைச்சர் சரி செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

காலை உணவு திட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுபிடித்தது போல் பேசி வருகிறார் என்றும் அவர் விமர்சித்தார். கோவை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்