தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்..! சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை..!!

Senthil Velan

திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:08 IST)
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
 
தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

ALSO READ: கலர் கலராக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி..! ஆர்.எஸ். பாரதி கடும் விமர்சனம்..!!
 
வருகிற 4ஆம் தேதி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்