மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பு..! போரை நிறுத்தம் திறன் மோடிக்கு உள்ளது..! அண்ணாமலை.....

Senthil Velan

செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (16:40 IST)
மூன்றாம் உலகப்போர் வரும் சூழல் உருவாகியுள்ளது என்றும் இதனை தடுக்கும் திறன்கொண்ட உலக தலைவராக மோடி திகழ்கிறார்  என்றும் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சூலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 
 
செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 
முன்னதாக, பாப்பம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரை ஆற்றிய அண்ணாமலை, 1972 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் உயிரிநீத்து தியாகிகளாக உள்ள இடத்தில் பிரச்சாரம் செய்வதை மரியாதைக்குறியதாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.
 
இன்றைய சூழலில் உலக அளவில் மீண்டும் ஒரு உலகப் போர் வரக்கூடிய நிலை உருவாகி வருகிறது என்றும் ரஷ்யா உக்ரேன் போர் நடைபெற்று வருகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.
 
இப்போது இஸ்ரேல் ஈரானுக்கு இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்த அவர்,  வருங்காலத்தில் சவுதி அரேபியா நாட்டில் போர் பதட்டம் ஏற்படும் என கருதப்படுகிறது என்றும் மூன்றாம் உலகப்போர் வரும் சூழல் உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
 
இதனை தடுக்கும் திறன்கொண்ட உலக தலைவராக மோடி திகழ்கிறார் என்றும் போர்களை நிறுத்தி உலக அமைதியை கொண்டு வரும் திறன் மோடி அவர்களுக்குத்தான் உள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

ALSO READ: எவ்வளவு காலம் ஆய்வு செய்வீர்கள்.! சட்டப்பேரவை நேரலை வழக்கில் நீதிமன்றம் கேள்வி..!
 
எனவே, நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும் உலக அமைதிக்காகவும் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த தேர்தல் நாட்டை ஆளக்கூடிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றும் இம்முறை 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பெற்று மோடி பிரதமராக வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்