வாட்ஸ் ஆப்பும் வேணாம்.. ஒன்னும் வேணாம்! – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (14:21 IST)
வாட்ஸ் ஆப்பின் புதிய கட்டுப்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் சமீபத்தில் புதிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கொள்கைகளை வெளியிட்டது. இதன்மூலம் தனிநபர் தகவல்களை வாட்ஸப் சேமிக்கப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பலர் வாட்ஸப்பை விடுத்து டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் புதிய கொள்கைகள் குறித்து வாட்ஸப் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தொடர்ந்து வாட்ஸ் ஆப் உபயோகிப்பது குறித்து பயனாளர்களிடம் தோராயமாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 18 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ் ஆப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் சார்பிலும் இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது வாட்ஸ் ஆப்பிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்