வாட்ஸ்அப்பை டெலிட் செஞ்சிடுங்க! – சொல்பவர் டெலிகிராம் ஓனர்!

ஞாயிறு, 24 நவம்பர் 2019 (11:06 IST)
தகவல் திருட்டு அதிகம் நடைபெறுவதாக கூறப்படும் வாட்ஸப் செயலியை டெலிட் செய்துவிடுமாறு டெலிகிராம் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கிய வாட்ஸப் செயலியை பின்னர் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. தகவல் பறிமாற்ற செயலிகளில் முதலிடத்தில் இருக்கும் வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் 1.6 பில்லியன் மக்கள் உபயோகித்து வருகின்றனர்.

சமீப காலமாக பேஸ்ஃபுக் மற்றும் வாட்ஸப் மூலமாக பகிரப்படும் தகவல்கள் அதிகமாக திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஃபேஸ்புக் நிறுவனமே தனது பயனாளர்களின் விவரங்களை தனியாருக்கு விற்றதாக சிக்கியது. மேலும் வாட்ஸப் மூலம் மொபைலில் உள்ள தரவுகளும் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய டெலிகிராம் என்னும் மற்றொரு தகவல் பறிமாற்ற செயலியின் நிறுவனர் பரேல் துரோவ் ”வாட்ஸப் மூலம் உங்களது பரிமாற்ற தகவல்கள் மட்டுமல்ல உங்கள் கேலரியில் உள்ள போட்டோக்களையும் திருட முடியும். வாட்ஸப் என்னும் ஒற்றன் வேலை செய்யும் செயலியை இன்றே டெலிட் செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 200 மில்லியன் பேர் மட்டுமே டெலிகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அதன் நிறுவனர் வாட்ஸப்பை குறை கூறி இருப்பது தொழில் போட்டியாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்