108 MP கேமரா.. தெறிக்கும் குவாலிட்டி..! Realme 11 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (11:36 IST)
ரியல்மி நிறுவனம் பக்காவான கேமரா அம்சங்களுடன் தனது புதிய Realme 11 5G ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பல புதிய மாடல் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme 11 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Realme 11 5G சிறப்பம்சங்கள்:

இந்த Realme 11 5G ஸ்மார்ட்போன் க்ளோரி கோல்ட், க்ளோரி ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

Realme 11 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.18,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.19,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்