வாட்ஸ் அப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்! – டெலிகிராம், சிக்னலுக்கு வரவேற்பு!

ஞாயிறு, 10 ஜனவரி 2021 (12:37 IST)
வாட்ஸ் அப் செயலியின் புதிய தனிநபர் கொள்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் டெலகிராம், சிக்னல் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் தகவல் தொடர்பிற்கு பயன்பட்டு வரும் செயலிகளில் மிக முக்கியமான செயலியாக விளங்கி வருவது வாட்ஸப். உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸப், பேஸ்புக் நிறுவனர் மார் ஸுகர்பெர்கிற்கு சொந்தமானது.

சமீபத்தில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்திய வாட்ஸ் அப் தற்போது தனிநபர் தகவல்கள் சேமித்தல் அதை வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு மாற்றுதல் போன்றவற்றிலும் ஈடுபடுவதற்கான புதிய கொள்கைகளை விதித்துள்ளது பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்பின் இந்த நிபந்தனைகளுக்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் பலரும் மற்ற என்க்ரிப்டட் செயலிகளான டெலகிராம், சிக்னல் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்