கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் தகவல்கள் திருடப்படுகிறதா ?

சனி, 13 ஜூலை 2019 (12:33 IST)
கூகுள் அசிஸ்டண்ட் வசதியைப் பயன்படுத்தினால் அதில் நாம் பயன்படுத்தப்படும் தகவல்கள் உரையாடல்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவும்  மற்றும் கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலமாகத் திருடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இருபத்தொன்றாம் நூற்றாண்டிலேயே மனிதன் தொழில்நுட்பத்தின் உச்சத்திற்குச் சென்றுவிட்டான். எத்தனையோ தொழில்நுட்பங்கள் வாழ்வில் புகுந்து மனிதனின் வேலைகளைச் சுலபமாக்குகிறது. ஆனால் அதுவே நமக்கு தீங்கிழைக்கும் போதுதான் நம்மை அது பெரிதும் பாதிக்கிறது.
 
இந்நிலையில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் தகவல்கள், உரையாடல்கள், ஸ்மார்ட்போன்கள் மூலமாகவும், கூகுள் ஹோம்  மற்றும் ஸ்மாட் ஸ்பீக்கர் மூலமாக திருடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
 
இதில் முக்கியமாக பயனாளர்கள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைப் பயன்படுத்த தங்கள் வாய்ஸ் சேவையை உபயோகிப்பதால், பயனாளர்களின் குரல் பதிவு மூலம் கேட்கும் அனைத்து கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை கூகுள் சேமித்து வைத்துக்கொள்ளும். அதன்மூலம் அவர்களின் அந்தரங்கத் தகவல்கள் அசிஸ்டெண்ட் சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ள ஒப்பந்ததாரர்களால் திருடப்படுவதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டை கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.மேலும்  இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்