பரங்கிக்காயை சாப்பிடுவதன் நன்மைகள்

ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (00:20 IST)
பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.
 
பரங்கியில் நமது சருமத்துக்கு தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமம் பளபளப்புக்கு காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும்  மக்னீசியமும் உள்ளது.
 
தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். மேலும் இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும்  ஸியாக்ஸாந்தின் ஆகியவற்றைக் கொண்டது.
 
வைட்டமின் ஏ அபரிமிதமாக கொண்ட இது, உடலுக்கு தேவையான இயற்கையான ஆன்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி  சவ்வுப் பகுதிகளையும் பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்