பிரபல கார்ட்டூன் இயக்குனர் காலமானார்! – 90ஸ் கிட்ஸ் அஞ்சலி!

திங்கள், 20 ஏப்ரல் 2020 (11:49 IST)
டாம் அண்ட் ஜெர்ரி உள்ளிட்ட பிரபல கார்ட்டூன் தொடர்களை இயக்கிய பிரபல கார்ட்டூன் இயக்குனர் உடல்நல குறைவால் காலமானார்.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கார்ட்டூன் தொடர்களில் குழந்தைகளை கவர்வதாக விளங்கி வரும் தொடர் டாம் அண்ட் ஜெர்ரி. 1940ம் ஆண்டில் ஹன்னா மற்றும் பார்பெரா தயாரிப்பில் வெளியான இந்த தொடரை சக் ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபலமான இயக்குனர்கள் பலர் இயக்கினர். அவர்களில் ஒருவர்தான் ஜீன் டெய்ச்.

ஆரம்ப காலங்களில் ராணுவத்தில் விமானியாக பணியாற்றிய டெய்ச், பின்னாட்களில் கார்ட்டூன் இயக்குவதில் தனது கவனத்தை திருப்பினார். இவர் இயக்கத்தில் உருவான “மன்றோ” என்ற கார்ட்டூன் குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்ததை தொடர்ந்து புகழடைந்த இவர், தொடர்ந்து குழந்தைகளின் விருப்ப கார்ட்டூன்களான பாபாய், டாம் எண்ட் ஜெர்ரி போன்ற தொடர்களையும் இயக்கியுள்ளார்.

வயது முதிர்ந்த இவர் உடல்நல குறைவால் சில நாட்கள் முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 16 அன்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதிலும் உள்ள டாம் அண்ட் ஜெர்ரி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்