நீயெல்லாம் மனுசனே கிடையாது? – வெறும் கையால் கேட்டை உடைத்த ராக்!

செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:54 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வெயின் ஜான்சன் தனது வீட்டு கேட் திறக்காததால் அதை வெறும் கையாலேயே உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் ரெஸ்லிங்கில் இருந்து வந்து திரைப்படங்களில் பிரபலமான நாயகரான வலம் வருபவர் ராக் என்று அழைக்கப்படும் ட்வெய்ன் ஜான்சன். ஜுமான்ஜி, ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ட்வெய்ம் ஜான்சன் தற்போது டிசி சூப்பர்ஹீரோ படமான ப்ளாக் ஆடம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பிற்காக சில நாட்களுக்கு முன்னர் ராக் தனது வீட்டிலிருந்து கிளம்பியபோது, வீட்டில் உள்ள தானியங்கி முகப்பு கேட் திறக்கவில்லை. படப்பிடிப்புக்கு தாமதமானதால் கேட்டை வெறும் கையாலேயே பிடுங்கி எறிந்துவிட்டு ஷூட்டிங் கிளம்பி சென்றுள்ளார் ராக். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ராக் என்னும் ட்வெய்ன் ஜான்சன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்